2025 மே 17, சனிக்கிழமை

உயிர்த்த ஞாயிறு ஆராதனை

Thipaan   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு சிறைச்சாலையின் கிறிஸ்தவ சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட  உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டிய ஆராதனை மட்டக்களப்பு சிறைச்சாலையில இன்று (05) இடம்பெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா, அருட்தந்தையர்களான ஏ. தேவதாசன், ஜெரிஸ்டன் வின்சன் ஆகியோர் கூட்டுத்திருப்பலியை ஒப்பக் கொடுத்தனர்.

சிறைச்சாலையின் அத்தியட்சகர் எஸ்.வி.எச். பிரியங்கர, பிரதம சிறைக்காவலர் ஆர். மோகன்ராஜ், அருட்சகோதரிகள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆராதனையின் இறுதியில் சிறைச்சாலையில் உள்ள 325 கைதிகளுக்கும் ஆயர், சிற்றுண்டிகளை வழங்கி வைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .