Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாக அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தின் சங்காபிஷேக கிரியைகள் திங்கட்கிழமை (06) சிறப்பாக நடைபெற்றன.
பன்னிரெண்டு நாளாக இடம்பெற்றுவந்த மண்டலாபிஷேகப் பூஜைகளின் இறுதிநாளன்று கோளாவில் அருள்மிகு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்திலிருந்து இடம்பெற்ற பாற்குட பவனி ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தை சென்றடைந்தது பாலாபிஷேகத்துடன் சங்காபிசேகமும் சிறப்புற இடம்பெற்றது.
ஆலயப் பிரதம குரு க.கு.சீதாராம் குருக்கள் ஆசியுரையுடன் அருள்மிகு ஸ்ரீP மகா கணபதி ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட சிறப்பு மலரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தனது பாரியாரோடு இணைந்து வெளியிட்டு வைத்தார்.
இம்மலரின் முதற்பிரதியை ஆலயப் பிரதம குரு க.கு.சீதாராம் குருக்களும் ஏனைய பிரதிகளை ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்களும் ஏனைய பிரமுகர்களும் பெற்றுக்கொண்டனர்.
சங்காபிஷேகப் பூஜைகளின் சிறப்பம்சமாக ஆலய நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் வறிய பெண்களுக்குச் சேலைகள் அன்பளிப்பாக வழங்கும் வைபவமும் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வும் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றன.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் மன்றத் தலைவர் எம்.நௌஷாட் மஹ்றுபின் அனுசரணையோடு இடம்பெற்ற வைபவத்தில் தெரிவுசெய்யப்பட்ட வருமானம் குறைந்த மக்களுக்கு கோழி வளர்ப்புக்கான குஞ்சுகளும் அவற்றுக்கான உணவுப் பாத்திரங்களும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
13 minute ago
51 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
51 minute ago
56 minute ago
1 hours ago