2025 மே 17, சனிக்கிழமை

தூய சூசையப்பர் ஆலயம் திறந்து வைப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நானாட்டான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  அச்சங்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தூய சூசையப்பர் ஆலயம் மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையால், இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை அபிசேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

ஆயருடன் இணைந்து மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, நானாட்டான் பங்குத்தந்தை அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயரின் 75ஆவது பிறந்த தினத்தை அச்சங்குளம் தூய சூசையப்பர் ஆலயத்தில் குருக்கள் மற்றும் பங்கு மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடினர்.

இதன் போது ஆயர் கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பித்தார்.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .