2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

30 வருடங்களின் பின்னர் ஊற்றடிப்பிள்ளையார் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

Gavitha   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை கிண்ணியா ஊற்றடிப்பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 30 வருங்களின் பின்னர் புதன்கிழமை (22) நடைபெற்றது.

இம்மகா கும்பாவிஷேகத்தை திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திர குருக்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

இந்த விநாயகர் ஆலயத்தின் சுற்றாடலில் இருந்தோர் அண்மை காலங்களில் ஏற்பட்ட கலவரம் காரணமாக இடம்பெயர்ந்து விட்டனர்.  இந்நிலையிலேயே இந்த கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதன்போது, விநாயகப்பெருமானுக்கு எண்ணெய்க்காப்புச் சாத்தப்பட்ட பின்னர் மகா கும்பாபிஷேம் நடைபெற்றது. இதன்போது பெருந்தொகையாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .