2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருக்கோணேஸ்வர பெருமானின் தெப்பம் திருவிழா

Thipaan   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

வரலாற்று பெருமை மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வர பெருமானின் தெப்பம் திருவிழா நேற்று புதன்கிழமை(22) நடைபெற்றது.

இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களால் இத்திருவிழா திருவிழா நடத்தப்பட்டது.
பூங்காவனத்; திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது.

ஆலயத்தில் இருந்து பெருமாட்டியுடன் எழுந்தருளிய பெருமான் கோட்டை வாசல் வழியாக,  உயர்ந்தபாடு என அழைக்கப்படும் கடற்கரையில் இருந்து தெப்பத்தில் ஏறி கோணேச மலையினை சமுத்திரம் வழியாக வலம் வந்து திருகோணமலை கடற்கரைக்கு வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

திருக்கோணேஸ்வர பெருமானின் வருடாந்த மகோற்சவம் பங்குனி உத்தரத்தின் போது 03.04.2015 ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .