Gavitha / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு, புளியடிக்குடா புனித செபஸ்தியார் தேவாலயத்தின் திருச் சொரூப பவனி சனிக்கிழமை (25) இடம்பெற்றது.
தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு ஆரம்பமான சொரூபப் பவனி, புதிய வீதி, சின்ன உப்போடை வாவிக்கரை வீதி, பார் வீதி, பயனியர் வீதி, பன்சல வீதி, பாடும் மீன் வீதி வழியாக தேவாலயத்தைச் சென்றடைந்தது.
தேவாலயத்தின் பங்குத்தந்தை எஸ். அகில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தி புனித செபஸ்தியாரின் நாமத்தை உச்சரித்த வண்ணம் சென்றனர்.
ஊர்வலத்தின்போது, கலந்து கொண்டவர்கள் பிரதான சந்திகளில் முழந்தாலிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


3 minute ago
12 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
39 minute ago
50 minute ago