Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பங்கு தந்தை எஸ்.அகில்ராஜ், அருட்தந்தை ஜோசப் மெறி, அருட்தந்தை ஜீவராஜ் ஆகியோர் இணைந்து திருநாள் திருப்பலியை ஒப்புகொடுத்தனர்.
ஆலய திருவிழா 17.04.2015 வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழா காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு அருளுரைகளுடன் திருப்பலியும் இடம்பெற்றதுடன் திருப்பலியின் இறுதியில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் போட்டிகளும் நடத்தப்பட்டன.
நேற்று சனிக்கிழமை (25) மாலை 05.30 மணிக்கு புனித செபஸ்தியாரின் திருவுருவம் பவனியாக எடுத்துவரப்பட்டு, ஆலயத்தில் சிறப்பான திருப்பலி திவ்விய நற்கருணை வழிபாடுகளும் மறைவுரைகளும் இடம்பெற்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு ஆயரின் தலைமையில் விசேட திருநாள் திருப்பலியும் சிறப்பான மறைவுரையும் இடம்பெற்றதுடன், திருப்பலியைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இறுதி நிகழ்வாக ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட ஜெப வழிபாடுகளுடன் ஆலய திருவிழா திருநாள் கொடி இறக்கப்பட்டு ஆலய வருடாந்த திருவிழா இனிதே நிறைவுற்றது.
15 minute ago
53 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
53 minute ago
58 minute ago
1 hours ago