2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாற்குடப் பவனி

Sudharshini   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

– வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழாவின் 9ஆம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை (28) பாற்குடப் பவனி இடம்பெற்றது.

களுவாஞ்சிகுடி மாரியம்மன் ஆலயத்திலிருந்து பாற்குடம் ஏந்தியவண்ணம் பக்தர்கள் பட்டிருப்பு பிரதான வீதி வழியாக பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தனர்.

பின்னர், மூல மூர்த்தியாகிய பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகருக்கு சிவ ஸ்ரீ இரா.கு.குருக்கள் தலைமையில் பாலாபிஷேகம் நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபைத்தலைவர் இ.ரமேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருந்திரளான பக்கதர்கள் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .