Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை, லிந்துலை மெராயா நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம், எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை (01) ஆரம்பமாகவுள்ளது.
அன்றைய தினம் காலை 7 மணிக்கு நித்திய பூஜையினை தொடர்ந்து புனிததீர்த்தம் எடுத்துவரப்பட்டு கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமாகும்.
மறுநாள் சனிக்கிழமை (02) காலை நித்திய பூஜையினை தொடர்ந்து விசேட பூஜை நடைபெறும்.
மெராயா தெப்பகுளத்திலிருந்து பாற்குடபவணி, திங்கட்கிழமை (03) காலை 7 மணிக்கு ஆரம்பித்து ஆலயத்தில் 108 சங்காபிஷேகம் நடைபெற்று மகேஸ்வர பூஜையினை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
செவ்வாய்க்கிழமை (04) காலை 8 மணிக்கு நடைபெறும் வசந்தமண்டப பூஜையினை தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகர், மங்கள வாத்தியங்கள் முழங்க நகர் வலம் வந்து அடியார்களுக்கு அருள்புரிவார்.
புதன்கிழமை (05) காலை தீர்தோற்சவம் நடைபெற்று வைரவர் மடை பிரசாதம் வழங்கப்பட்;டு விழா இனிதே நிறைவுரும்.
லிந்துலை, மெராயா நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தில் அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
08 Jul 2025