Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மே 18 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இறதி நாளான இன்று திங்கட்கிழமை (18) தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
இன்று காலை சுவாமி உள்வீதி வலம் வந்து முத்துச் சப்பரத்தில் ஆரோகணித்து பிரதான வீதி வழியாக களுவன்கேணி கடற்கரைக்குச் சென்று ஆலய பிரதம குருவின் தீர்த்தோற்சவக் கிரியைகளின் பின்பு சுவாமி தீர்த்தமாடினார்.
இதன்போது அடியாhகள் கலந்து கொண்டு தீர்த்தமாடி தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர்.
இதேவேளை, மட்டக்களப்பு செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்றது.
நேற்றுக் காலை 6.00 மணியளவில் விநாயகப் பெருமானுக்கு வசந்த மண்டபத்தில் அலங்கார பூஜை இடம்பெற்று சுவாமி உள் வீதி வலம் வந்த பின்பு தேரில் ஆரோகணித்து வெளி வீதி வலம் வந்தது.
இதன்போது அடியார்கள் வடம்பிடித்திழுத்து தங்கள் நேர் கடன்களை நிறைவேற்றினர்.
39 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago