Gavitha / 2015 மே 21 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் 1008 சங்காபிஷேக தினத்தையொட்டி பால்குடப்பவனி இன்று வியாழக்கிழமை (21) மட்டக்களப்பில் நடைபெற்றது.
கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பால்குடப் பவனி பொற்றொழிலாளர் வீதி, பாடும் மீன் வீதி, பயனியர் வீதி, பார் வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.
கும்பாபிஷேக தினத்தையொட்டிய சங்காபிசேகக் கிரியைகள் ஆலய பிரதம குரு எஸ். ஜேகன் குருக்கள் தலைமையில் விஸ்வப்பிரம்ம ஸ்ரீ சற்குணராஜாக் குருக்கள் நிகழ்த்தினர்.
இலட்சார்ச்சனை கடந்த 01.05.2015இல் ஆரம்பமாகி புதன்கிழமை (20) நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago