2025 மே 16, வெள்ளிக்கிழமை

கண்ணகி அம்மன் ஆலயங்களில் கண்ணகிக்கான விழா கொண்டாட்டம்

Gavitha   / 2015 மே 30 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள முனைக்காடு கண்ணகி அம்மன் ஆலயம், முதலைக்குடா கண்ணகி அம்மன் ஆலயம், குறிஞ்சிநகர் கண்ணகி அம்மன் ஆலயம், மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலயம், கொக்கட்டிச்சோலை கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் களுவாஞ்சிகுடி, புதுக்குடியிருப்பு, எருவில், துறைநீலாவணை, தும்பங்கேணி போன்ற இடங்;களில் கண்ணகிக்கான விழா கடந்த 25ஆம் திகதி முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இத்திருச்சடங்குகள் யாவும் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது.
 
இதற்காக கிராமங்கள், வீதிகள் தோறும் மின் விளக்குகளாலும் தோரணங்களாலும் தற்போது அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.

சடங்குகளின் போது, கலைநிகழ்வுகள், கூத்துக்கள், கதாப்பிரசங்கங்கள் என்பன சிறப்புற இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .