2026 ஜனவரி 14, புதன்கிழமை

கூழாவடி புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றம்

Sudharshini   / 2015 ஜூன் 20 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் 40ஆவது கொடியேற்ற திருவிழா வெள்ளிக்கிழமை (19) மாலை ஆரம்பமானது.

இதுவரை காலமும் தற்காலிக ஆலயத்தில் இயங்கிவந்த அந்தோனியார் ஆலயம், தற்போது புதிய கட்டடத்தில் புதுப்பொலிவுடன் இயங்கிவருகின்றது.

1975ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தேவாலயமானது அற்புதங்கள் பல புரிந்த ஆலயமாக கருதப்படுகின்றது.
இந்த ஆலயத்தின் 40ஆவது ஆண்டு கொடியேற்றம் ஆலயத்தின் பங்குத்தந்தை பேதுரு ஜீவராஜ் தலைமையில் நடைபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .