2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அடிக்கல் நாட்டு நிகழ்வு

Niroshini   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலய மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (09)ஆலய தலைவர் எஸ்.சுரேஷ் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வாலயத்தின் பழைமை கொண்ட முன் மண்டபம் உடைக்கப்பட்டு அதனை மீளவும் புதிதாக அமைக்கும் வகையில் இவ் மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆகம கிரியைகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன்,திருக்கோவில் வலக்கல்வி நிர்வாகப் பணிப்பாளர் யோ.ஜெயசந்திரன், ஆலய வண்ணக்கர் வி.ஜெயந்தன்,  செயலாளர் அ.செல்வராசா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .