Thipaan / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய 60வது பாதயாத்திரை இன்று சனிக்கிழமை (05) காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில்இடம் பெற்ற இ;ப்பாத யாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
வருடா வருடம் இடம்பெறும் இப் பாதயாத்திரை இவ் வருடம் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பமானது.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையாவின் பிராத்தனை திருப்பலியினைத் தொடர்ந்து காலை 5.30மணிக்கு பாதயாத்திரை ஆரம்பமாகி வீச்சுக்கல்முனை சந்தணமாதா ஆலயம் வலையிறவுப் பாலம் ஊடாக சென்றது.
விசேட சொரூபமும் இதன் போது கொண்ட செல்லப்பட்டது. கடந்த 28ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறவுள்ள நிலையிலேயே இப் பாதயாத்திரை இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பங்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் இந்த பாதயாத்திரையில் கலந்துகொண்டனர்.



14 minute ago
35 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
35 minute ago
41 minute ago
46 minute ago