2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இராஜகோபுர மகா கும்பாபிஷேகம்

Niroshini   / 2015 நவம்பர் 02 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ பரமநயினார் (ஐயனார்)ஆலயத்தின் இராஜகோபுரத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

கடந்த 31ஆம் திகதி ஆலயத்தில் கும்பாபிஷேகத்துக்கான கிரியைகள் ஆரம்பமாகின.

கும்பாபிசேக கிரியைகள் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ ரங்கநாதன் குருக்களினால் நடத்தப்பட்டன.

இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாகபூஜை, கும்ப பூஜை நடைபெற்றதுடன் மாணவர்களின் விசேட நடன நிகழ்வுகளும் சங்கீத நிகழ்வுகளும் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து பிரதான கும்பத்துக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு இராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .