2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

இறுதிநாள் நிகழ்வுகள்...

Editorial   / 2024 ஜூலை 12 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டு - துஷாரா

மட்டக்களப்பு கல்லடி - உப்போடை, நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று வௌ்ளிக்கிழமை  (12) இடம்பெற்றன.

கடந்த (03) ஆம் திகதி  நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த திருவிழா நிகழ்வுகள் கடந்த 10 தினங்களாக இடம்பெற்று, 10 ஆம் நாளான   வெள்ளிக்கிழமை (12) அதிகாலை தீ மிதிப்பு இடம்பெற்றதையடுத்து தீர்த்தோற்சவத்துடன் ஆலய உற்சவம் நிறைவுபெற்றது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சின்னையா கிருபாகரன் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த மகோற்சவ திருவிழாவுக்கு பல பிரதேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்த அடியவர்கள் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .