2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஏடு தொடங்குதலும் ஆயுத பூஜையும்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.நடராஜன்

நவராத்திரி விரதம் புரட்டாதி மாதத்தில் வரும் வளர்பிறைப் பிரதமை நாள் முதல் நவமி நாள் வறையுள்ள 09 நாள்கள் நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஒக்டோபர்  15ஆம் திகதி  விஜயதசமி, ஆயுத பூஜை மற்றும் கேதாரகௌரி விரதத்தின் தொடக்க நாளில் நிறைவடைகின்றது.  

ஒன்பது நாள்களும் பூஜை செய்ய முடியாதவர்கள் கடைசி மூன்று தினங்களாகிய சப்தமி, அட்டமி, நவமி ஆகிய நாள்களில் வழிபாடு செய்தாலும் முழு நாள்களும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏடு தொடங்குதல்:

ஒன்பது நாள்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, 10ஆம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி. அதாவது வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியை இன்றுதான் ஆரம்பிப்பார்கள்.

இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும். இதனால்தான் சிறுவர்களுக்கு பாடசாலை கல்வியை தொடர்வதற்கு முன்னதாக சிறந்த நல்ல நேரத்தில் பெரியோரின் ஆசியுடன் முதல் முதலாக ஏடு தொடங்கும் முறை தொன்று தொட்டு இருந்து வருகின்றது.

“பிள்ளையார் சுழி போட்டு - நீ நல்லதை தொடங்கி விடு” என்பதற்கு எதுவாக  ஏடு  தொடங்கும் போது, வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது முதன் முதலாக குழந்தையின்  கையைப் பிடித்து விரலினால் எழுதி விடுவர்.

இதன்போது, சிறந்த பேச்சாற்றலும் இவ் பூவுலகில் வாழ்வதற்கு தேவை. எனவேதான், அன்றைய தினம் நாக்கில் தெர்ப்பைப் புல்லினால் தேன் ஒரு துளியைத் தொட்டு, குழந்தையின் நாக்கில் வைப்பதும் உண்டு.

ஆயுத பூஜை:

நவராத்திரிப் பண்டிகையில் சரஸ்வதி பூசை அன்று, அவரவர் தம் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளுக்குச் செய்யும் பூஜை  ஆயுத பூஜை யாகும்.

மனிதன் தமது வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான தொழிலுக்கு ஏதோவொரு கருவி தேவையாக உள்ளது உழவனுக்கு ஏர் முக்கியம், எழுத்தாளனுக்கும் எழுதுகோல் போல ஒவ்வொருவரும் தாம் செய்கின்ற தொழிலுக்கு நன்றி செலுத்தும் முகமாக இவை அமைகின்றன.

இது குறிப்பாக தாம் வாழ்க்கையை நடத்த உதவுகின்ற தொழிலுக்கு செய்கின்ற பூஜை யாகவே பார்க்கப்படுகின்றது.

இறுதி 03 நாள்களும் நவராத்திரி பூஜை. ஆய கலைகள் 64க்கும் அதிபதியான சரஸ்வதி தேவிக்கு அலுவலகங்கள் பாடசாலைகளில் விசேட பூசை இடம்பெறுகின்றமை சிறப்பாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .