2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

குரு ஜெயந்தி

Sudharshini   / 2015 ஒக்டோபர் 22 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

காய்த்திரி சித்தர் ஸ்ரீ முருகேசு மஹரிஷியின் 82ஆவது ஜனன தின ஜெயந்தி வைபவம், எதிர்வரும் திங்கட்கிழமை (26) நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வர ஆலய காயத்திரி பீட வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 5.30 மணிமுதல் வருஷாபிஷேக அஸ்டோத்ர சத (108) சங்காபிஷேகமும் காலை 10 மணிக்கு காயத்திரி சித்தரின் திரு உருவச் சிலை  நுவரெலியா நகர்வலமும் இடம்பெறும்.

26ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் காயத்திரி சித்தர்; ஸ்ரீ முருகேசு மஹரிஷி மகாசமாதி மண்டபத்தில் விஷேட ஸ்நபன பூஜைகளும் மகா மிருத்யுஞ்ஜெய ஹோமமும் நடைபெறவுள்ளதுடன் அன்று பிற்பகல் 2 மணிக்கு நுவரெலியா 'சினிசிட்டா' நகர மண்டபத்தில் காயத்ரி சித்தர் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் காயத்ரீயம் கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு வைபவங்களும் இடம்பெறும்.

27ஆம் திகதி அதிகாலை விஷேட அபிஷேக அலங்காரப் பூஜைகள், குருபூiஐகள், காயத்திரி பூiஐ, மஹா யாகம், பிரார்;த்தனை மற்றும் தியானம் நடைபெறும். இம்மூன்று நாட்களுக்கும் பக்தர்களுக்கு 'அன்னதானம்' வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .