2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கந்தசஷ்டி முருகநாம பஜனை

Editorial   / 2021 நவம்பர் 15 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா, நூருள் ஹுதா உமர்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடத்திய கந்தசஷ்டி முருகநாம பஜனை நிகழ்வானது, காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வு, காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அதிதிகளாக சுவாமி விபுலாநந்தர் பணிமன்ற தலைவர் வெ.ஜெயநாதன், அறங்காவலர் ஒன்றிய தலைவர் இரா. குணசிங்கம், செயலாளர் எஸ்.நந்தேஸ்வரன், மன்ற உபசெயலாளர் திரு எஸ்.விஜயரெத்தின் மற்றும் மாவட்டச் செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் ந.பிரதாப் கலந்துகொண்டனர்.

அத்துடன், காரைதீவு பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி சிவராஜா சிவலோஜினி, கல்முனை வடக்கு இந்து கலாசார உத்யோகத்தர் திருமதி உருத்திரமூர்த்தி கெளசல்யவாணி, திருக்கோவில் பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி பிரசாந் சர்மிளா ஆகியோம் கலந்து கொண்டனர்.

காரைதீவு சர்வேஸ்வரா பஜனை குழுவினர் மற்றும் சகானா கலைக்கூட பஜனை குழுவினரின் முருக நாம பஜனை இதன்போது நடைபெற்றன.

மேலும், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டதுடன், நிகழ்வுக்கான ஒழுங்கமைப்புக்களை இந்து சமய கலாசார மாவட்ட செயலக உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மேற்கொண்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X