2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சுவாமி ஸ்ரீ முக்தானந்தாவின் அருளுரை...

Princiya Dixci   / 2016 ஜனவரி 27 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
சுவாமி இராமதாஸ் நிலைய ஸ்தாபகரும் கொடை வள்ளலுமாகிய வி.பி.பரமலிங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த சுவாமி ஸ்ரீ முக்தானந்தா, மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் அமைந்துள்ள கருணாலயத்தில் தங்கியிருந்து பக்தர்களை சந்தித்து அருளுரை வழங்கி வருகின்றார்.
 
சுவாமி ஸ்ரீ முக்தானந்தா அவர்களிடம் கல்லடி ஹரி இல்லச் சிறுவர்கள் ஆசி பெற்றதுடன், அவரது அருளுரையையும் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு வர்த்தக சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
 
மட்டக்களப்பில் 10 நாட்கள் தங்கியிருக்கும் சுவாமி ஸ்ரீ முக்தானந்தா, பாடசாலை மற்றும் அலுவலகங்களுக்கு இராம நாமத்தின் மகிமையையும் ஆன்ம ஈடேற்றத்துக்கான வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றார்.
 
மேலும், எதிர்வரும் 30ஆம் திகதி பி.ப. 5.00 தொடக்கம் பி.ப. 6.00 வரை கருணாலயத்தில் இராம நாமத்தின் மகிமை பற்றிய சொற்பொழிவு நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வில் பக்த அடியார்களை கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .