Freelancer / 2022 ஜூலை 31 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சகா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா கொடியேற்ற நிகழ்வு கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கோலாகலமாக இடம்பெற்றது.

ஆலயபிரதம குரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் சுமார் 6 ஆயிரம் அடியார்கள் சகிதம் சிறப்பாக நடைபெற்றது. உதவிக்குரு சிவசிறி கோபி சர்மா உதவினார்.

ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க ஏற்பாட்டில் சரியாக காலை 11.20 மணியளவில் அரோகரா கோசம் விண்ணைப்பிளக்க கொடியேற்றம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
தொடர்ச்சியாக13 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் 11-ஆம் திகதி உகந்தைமலை சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் இடம் பெறும்.

இது இவ்வாறு இருக்க கதிர்காமத்துக்கான காட்டுப்பாதையில் பயணிக்கும் பக்தர்கள் தொடர்ச்சியான மழையால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதுவரை 20 ஆயிரம் அடியார்கள் காட்டுக்குள் பிரவேசித்து இருக்கின்றார்கள்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026