Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 டிசெம்பர் 10 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திரப் பிரதேசத்தின் பாலகோலில் வசிக்கும் தீவிர சிவன் பக்தர் ஒருவர், பஞ்சராம க்ஷேத்திரங்களில் ஒன்றான க்ஷீர ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு ஐஸ்கிரீம் நைவேத்தியம் அளித்த செய்தி தற்போது அப்பகுதி மக்களிடையே தீயாய் பரவி வருகிறது.
மேலும் ஐஸ்கிரீம் அலங்காரத்தில் இருந்த சிவனைக் காண திரளானோர் கோயிலுக்கு வருகை தந்தனர். பொதுவாக ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பொருள் கோயிலுக்கு வரும் அனைத்து பக்கதர்களுக்கும் வழங்கப்படும்.
ஏனெனில் கடவுளுக்கு படைக்கும் தனித்தன்மை வாய்ந்த பிரசாதத்துடன் பக்தர்கள் ஆசிர்வதிக்கப்படுவார்கள் என்று அர்த்தம். சாதாரணமாக திருவிழாக் காலங்களில் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம் என்றாலும், இந்த குறிப்பிட்ட கோயிலுக்குச் செல்லும் மக்கள் சில சுவையான பிரசாதங்களை பெறுவதற்காகவே செல்வார்கள் என்று சொல்லலாம்.
ஏனெனில் இங்கு வரும் பக்தர்கள் பால் அல்லது தயிர் நைவேத்யத்தை இறைவனுக்கு அபிஷேகமாக வழங்குகின்றனர். இவை தவிர, சிலர் தேன், சர்க்கரை மற்றும் பலவிதமான பழச்சாறுகளை தெய்வத்திற்கு சமர்ப்பித்து பிரார்த்தனை செய்கிறார்கள். சிலர் ஒரு டம்ளர் தண்ணீரையும் அபிஷேகமாக வழங்குவார்கள்.
நைவேத்யத்தை நிறைவேற்றுவதன் மூலம் இறைவன் அவர்களை ஆசீர்வதிப்பார் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் அக்ககோயிலில் உள்ள தெய்வம் 'போலா சங்கரா' என்று குறிப்பிடப்படுகிறது.
17 minute ago
29 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
8 hours ago