Editorial / 2022 ஒக்டோபர் 30 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

முருகப் பெருமானுக்காக அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று இறுதி நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வுகள் பல ஆலயங்களில் சிறப்புற நடைபெற்றுள்ளது
சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.
இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (30) முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.
அந்தவகையில் முல்லைத்தீவு முள்ளியவளையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வேலவர் கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் இன்று ஆலயத்தில் சிறப்புற நடைபெற்றது.
முருகப்பெருமானுக்கு விசேட அபிடேங்கள் இடம் பெற்று மங்கள வாத்தியம் முழங்க உள்வீதி வலம் வந்து பக்தர்களின் அரோகரா கோசத்துக்கு மத்தியில் கடாய் வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த முருகப்பெருமான் சூரனைவதம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி கொடுத்தார்.
சிறப்பாக முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் இருந்து முருகனின் படைத்தளபதிகளான நவவீரர்கள் உடை அலங்காரத்துடன் நரதர் உள்ளிட்டவர்கள் முள்ளியவளை கல்யாணவேலவர் ஆலயத்தில் முருகனின் தளபதிகளாக வலம் வரும் காட்சி சிறப்பாக அமைந்துள்ளது.
இந்த வகையில் இவ்வாலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய விரதத்தினை நிறைவேற்றிக் கொண்டனர்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை ஸ்ரீ கல்யாணவேலவர் ஆலயத்தில் வருடம் தோறும் இளைஞர்களால் மிக சிறப்பாக சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகின்றமை குறிப்பிடதக்கது. (செ.கீதாஞ்சன்)








4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025