2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

ஜனன தின உற்சவம் ...

Editorial   / 2024 டிசெம்பர் 30 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


 

எஸ். தில்லைநாதன் 

 வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணையம்பதி ஸ்ரீ  வெங்கடேச வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் ஸ்ரீ ஆஞ்சநேய ஜனன தின உற்சவம், திங்கட்கிழமை (30) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜ பெருமாள், சீதேவி, பூமாதேவி ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தீபாராதனைகள், 108 மந்திர அர்ச்சனைகள் இடம்பெற்று நைவேத்தியங்கள் படைக்கப்பட்டன.

இந்த கிரியைகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ செ.ரமணிதர  குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் நடத்தி வைத்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .