2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

திருச்சொருப பவனி

Niroshini   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, புளியடிக்குடா புனித செபஸ்தியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை (23) மாலை நகரில் திருச்சொருப பவனி  இடம்பெற்றது.

தோவாலயத்தின் பங்குத்தந்தை வை. லோரஸ், உதவிப் பங்குத் தந்தை பிரதீப் மற்றும் அருட்தந்தை நவாஜி ஆகியோர் கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

தொடர்ந்து புனித செபஸ்தியாரை தாங்கிய வாகன ஊர்தி பவனியான புதிய கல்முனை விதி, சின்ன உப்போடை வீதி, பார் விதி, பன்சாலை வீதி, பயனியர் வீதி, பாடும் மீன் வீதி, லெடி மெனிங் ரைவ் வழியாக தேவாலயத்தைச் சென்றடைந்தது.

இதன்போது பவனியில் கலந்து கொண்டோர் மெழுகுதிரியை ஏந்திய வண்ணம் பிரதான சந்திகளின் செபத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .