Editorial / 2024 நவம்பர் 08 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா
வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரத இறுதி நாளான வியாழக்கிழமை(7) மழைக்கு மத்தியில் சூரன் போர் இடம்பெற்றது .
ஆயிரக்கணக்கான விரதாதிகள் சகிதம் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் மற்றும் ஆலயகுரு சிவசிறி அங்குசநாதக்குருக்கள் முன்னிலையில் சூரன் போர் ஆலய வெளிப் பிரகாரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் ஆலய வண்ணக்கர் வ.ஜயந்தன் கணக்குப் பிள்ளை இ.லோகிதராஜா பொருளாளர் கோ.கிருஸ்ணமூர்த்தி சமய ஆர்வலர் க.பார்த்தீபன்( பிரான்ஸ்) பிரதேச செயலாளர் அதிசயராஜ் உள்ளிட்ட பலரும் சமூகமளித்திருந்தனர்.
கடந்த 02ஆம் திகதி ஆரம்பமாகிய இக் கந்தசஷ்டி விரதம் ஆறாம் நாளாகிய 07 ஆம் திகதி சூர சம்ஹாரத்துடன் நிறைவு பெற்றது.
வழமைக்கு மாறாக ஏராளமான பக்தர்கள் விரதத்தினை இம்முறை அனுஷ்டித்திருந்தனர்.













56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago