2025 மே 07, புதன்கிழமை

திருப்பலி ஒப்புக் கொடுப்பு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 நவம்பர் 26 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட கிறிஸ்து அரசர் தேவாலயத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வைச் சிறப்பிக்கும் முகமாகவும் கிறிஸ்து அரசரின் பெருவிழாவை சிறப்பிக்கும் முகமாகவும் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்து அரசர் திருநாள் நிகழ்வுகள், இறுதி திருப்பலி ஒப்புக் கொடுப்புடன், இன்று (26) காலை இனிதே நிறைவு பெற்றன.

கிழக்குப் பல்கலைக்கழக கிறிஸ்தவதுறை தலைவர் அருட்தந்தை எ.எ.நவரட்னம் தலைமையிலும், சிரேஸ்ட விரிவுரையாளரும் பொருளாளருமான எ.அன்ரூவின் வழிகாட்டலிலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாலும் கத்தோலிக்க மாணவர் ஒன்றியத்தாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இத் திருநாள் நிகழ்வுகளில் பல்கலைக்கழக சமுகம் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உலக திருச்சபையானது கிறிஸ்து அரசரின் பெருவிழாவை கொண்டாடிவரும் வேளையில் கிழக்குப் பல்கலைக்கழக ஆலயத்தில் கிழக்குப் பல்கலைக்கழக் கத்தோலிக்க குடும்பத்தால் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இத்திருநாள் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நற்கருணை ஆண்டவரின்  எழுந்தேற்றமும், மாலை ஆராதனை வழிபாடும் கல்முனை பங்கு தந்தை அருட்தந்தை சடோய் சேர்டன் அவுட்ஸ்கோன் அடிகளின் தலைமையில் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 7.30 மணியளவில் திருநாள் ஆரம்பமாகி, மங்கள விளக்கேற்றலுடன் பாடல் குழுவின் இனிமையான பாடல் இசையுடன் அருட்தந்தை ஜோர்ஜ் டி லிமா அடிகளினால் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. பின்னர் நன்றியுரை மற்றும் சிறிய விருந்துபசார நிகழ்வுடன் இனிதே திருநாள் நிறைவுபெற்றதோடு பல்கலைக்கழக சமூகத்திற்கு மறக்க முடியாத நாளாகவும் மகிழ்ச்சி நிறை நாளாகவும் இந்நாள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X