Janu / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்பிட்டி பகுதியிலுள்ள தனியார் பாடசாலையொன்றைச் சேர்ந்த 16 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வியாழக்கிழமை (26) அன்று எல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சருமத்தில் ஏற்பட்ட அரிப்பு மற்றும் தடிப்பு காரணமாகவே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையின் ஒரே மண்டபத்தில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு ஒவ்வாமைக்கு உள்ளாகியுள்ளனர்.
ஏதேனும் பூச்சிகள் கடித்தமையினால் அல்லது விஷத்தன்மை கொண்ட திரவம் உடலில் பட்டமையினால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
32 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago