2026 ஜனவரி 06, செவ்வாய்க்கிழமை

திருவாசக விழா...

Editorial   / 2026 ஜனவரி 02 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ். தில்லைநாதன் 

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையால் ஆச்சிரம முதல்வர் சாதனைத்தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை காலத்தில் நடைபெறும் திருவாசக விழா, வெள்ளிக்கிழமை (02) அன்று இடம்பெற்றது.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நடராஜர் மற்றும் நாயன்மார்களின் திருவுருவங்களுடன் திருவாசக ஏடுகளும் ஊர்வலமாக சந்நிதி ஆலயத்திலிருந்து மங்கள இசையுடன் கூடிய அடியார்களின் சிவபுராண ஒதுதலுடன் ஆச்சிரமத்துக்கு எடுத்துவரப்பட்டு  விசேட பூசை வழிபாடுகள்  இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, யாழ்.பல்கலைக்கழக சைவசித்தாந்ததுறை பேராசிரியர் தி.செல்வமனோகரனின்  “ஆரோடு நோகேன்”  என்னும் திருவாசக அருளுரை இடம்பெற்றது.
 

உதவித் திட்டங்களாக, 97,700 ரூபாய் பெறுமதியான 2 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. வவுனியா - பரசங்குளத்தை சேர்ந்த தரம் - 10 இல் கல்வி கற்கும் மாணவிக்கும், அல்வாய் பகுதியை சேர்ந்த தரம்- 7 இல்  சின்னத்தம்பி வித்தியாலயத்தில்  கல்வி கற்கும் மாணவி ஆகியோருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .