2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தீபாவளி 2021 : விரதம், பூஜை மற்றும் முகூர்த்த நேரம்

Editorial   / 2021 நவம்பர் 04 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளி அல்லது தீபாவளி பண்டிகை, இலங்கை, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. தீப ஒளித் திருநாளான இந்த நாள், அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது.

இந்தத் திருநாளில் நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் மிகவும் ஆர்வத்துடன் கொண்டாடுவார்கள்.

இந்த பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு, மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து கழுவுவார்கள்.

பலர் தங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் விளக்குகள் ஏற்றி, பூக்கள் மற்றும் ரங்கோலி கோலங்கள் போட்டு அலங்கரிப்பார்கள்.

இந்த சிறப்பு தினத்தில், செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியை வணங்குவது வழக்கம். இந்த நாளில் சிறப்புப் பூஜைகள் செய்தால் உடல் நலம், செல்வம், செழிப்பு ஆகியவை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அமாவாசை இரவில், புதிதாக நிறுவப்பட்ட விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் சிலைகள் வைத்து, செழிப்பு மற்றும் புதிய தொடக்கத்தின் நினைவாக லட்சுமி பூஜை செய்யப்படுகிறது.

2021 தீபாவளி எப்போது கொண்டாடப்படுகிறது?

இந்து சந்திர நாட்காட்டியின்படி, கார்த்திகை மாதத்தின் 15-வது நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தீபத்திருவிழா நவம்பர் 4 (இன்று) கொண்டாடப்படுகிறது.

விரதம், பூஜை நேரம் மற்றும் முகூர்த்தம் :

இந்த ஆண்டு, லட்சுமி பூஜை முகூர்த்தம், மாலை 06:09 முதல் இரவு 08:04 வரை நீடிக்கும். இந்த நாளில், குபேர அல்லது செல்வத்தின் கடவுளும் வணங்கப்படுகிறார்.

த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, தீபாவளி நாளில், முழு நாள் விரதம் இருக்க வேண்டும். உண்ணாவிரதம் நிர்ஜாலா (தண்ணீர் உட்கொள்ளல் இல்லாமல்) அல்லது பழங்களை மட்டுமே உட்கொள்ள அனுமதிக்கும் ஃபாலாஹராக இருக்க வேண்டும். லக்னம், பிரதோஷ நேரம் மற்றும் அமாவாசை திதிக்கு ஏற்ப உரிய முகூர்த்தத்தின் போது பூஜை செய்ய வேண்டும்.

பிரதோஷ காலம் – மாலை 05:34 முதல் இரவு 08:10 மணி வரை

விருஷப காலம் – மாலை 06:09 முதல் இரவு 08:04 வரை

அமாவாசை திதி ஆரம்பம் – நவம்பர் 04, 2021 அன்று காலை 06:03

அமாவாசை திதி முடியும் நேரம் – நவம்பர் 05, 2021 அன்று அதிகாலை 02:44

முழுமையான தீபாவளி பூஜை சடங்கு :

ஆத்மா-ஷோதன் அல்லது சுய சுத்திகரிப்பு, சங்கல்பம் அல்லது விரதத்தைக் கடைப்பிடித்து அர்ப்பணிப்புடன் பூஜை செய்வது, குடும்பத்தில் அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் பொருட்டு சாந்தி பாத மந்திரத்தை ஓதுதல், மங்கள பாத மந்திரத்தை உச்சரித்தல், கலச ஸ்தாபனம், விநாயகப் பெருமானின் பூஜை, நவக்கிரக பூஜை (ஒன்பது கிரகங்களை வழிபடுதல்), லட்சுமி தேவி பூஜை, மகா காளி தேவியின் பூஜை, குபேர பூஜை ஆகிய பிரார்த்தனையுடன் தீபாவளி நாள் நிறைவு பெறுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .