Princiya Dixci / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நல்லூர் மாம்பழத்திருவிழா, இன்று புதன்கிழமை (09) காலை நடைபெற்றது.
சிவபெருமானுக்கு நாரதர் அளித்த மாம்பழத்தை விநாயகர், முருகன் ஆகிய தம் இரு பிள்ளைகளில் யாருக்கு அதனை வழங்குவது என சிவபெருமானுக்கு குழப்பம் ஏற்பட்டது.
எனவே, சிவபெருமானும் பார்வதியும் தம் இரு பிள்ளைகளையும் அழைத்து இவ்வுலகத்தை முதலில் சுற்றி வருபவர் எவரோ அவருக்கு மாம்பழம் கிடைக்கும் என தெரிவித்தனர்.
உடனே முருகன், மயில் மீது ஏறி உலகத்தை சுற்றிவரப் புறப்பட்டார். விநாயகர், தாய் தந்தையை சுற்றி வந்து வணங்கி நின்றார். மாம்பழம் விநாயகருக்கு கிடைத்தது.
இவ்வுலகத்தை சுற்றி வந்து பார்த்த போது விநாயகரிடம் மாம்பழம் இருப்பதை கண்டு கோபித்துக்கொண்டு ஆண்டிக் கோலம் பூண்டு, பழனி மலைக்கு முருகன் சென்றார்.
இவ்வரலாற்றுக் கதையை மையப்படுத்தியே மாம்பழத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
33 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
09 Nov 2025