2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

நாகபூசணி அம்மன் இரதோற்சவம்…

Editorial   / 2024 ஜூன் 20 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ பெருவிழா  பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் பக்தி பூர்வமாக வியாழக்கிழமை (20) இடம்பெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு  நாகபூஷணி அம்மன் ஆலய   வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இரதோற்சவம்  வியாக்கிழமை (20)  காலை   வசந்த மண்டப பூசைகளுடன் ஆரம்பமாகியது.

நாகபூசணி அம்மனுக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று  வசந்த மண்டபத்திலே விநாயகப் பெருமான் முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று மூன்று மூர்த்திகளும் உள்வீதி, வெளி வீதி எழுந்தருளி தனித்தனி தேரிலே ஏறி முத்தேர் பவனியாக இரதோற்சவம் இடம்பெற்றது.

16 தினங்களை கொண்ட ஆலய மஹோற்சவம் கடந்த 07ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் வியாழக்கிழமை (20)  இரதோற்சவமும், வெள்ளிக்கிழமை (21) தீர்த்தோற்சவமும் அன்றைய தினம் மாலை திருவூஞ்சலும் நடைபெற உள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை இரவு பூங்காவனத் திருவிழாவும் மறுநாள்  ஞாயிற்றுக்கிழமை(23) தெப்போற்சவம் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X