Editorial / 2023 மே 04 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாயம்மன் ஆலய சித்ரா பௌர்ணமி முத் திருவிழாவை முன்னிட்டு இன்று (04) வியாழக்கிழமை காலை நுவரெலியா லேடிமெக்கலம் டிரைவ் வீதியிலுள்ள நீர் வீழ்ச்சியிலிருந்து பால்குட பவனி ஆரம்பமானது.
அந்த பால்குட பவனி, நுவரெலியா உடபுல்லாவ வீதி, வைத்தியசாலை வீதி மற்றும் நவகம்கொட கிராமம் வழியாக ஆலயம் வந்டைந்ததும் 1008 சங்காபிசேகம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை (5) காலை பௌர்ணமி பூஜை நடைபெ சுவாமிகளின் முத் தேர்த்திருவிழா ஆரம்பமாகும். சனிக்கிழமை (06) தீ மிதிப்பு வைபவம் நடைபெறும்.
ஆலய முத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வைத்தியர் பரநீதன் குடும்பத்தினரால் சுமார் 40 இலட்சம் ரூபாய் செலவில் நன்கொடையாக வழங்கப்பட்ட தேர் வெள்ளோட்டம் புதன்கிழமை (03) மாலை இடம்பெற்றது. டி.ஷங்கீதன்






24 minute ago
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
44 minute ago
49 minute ago