Editorial / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
கொழும்பில் சித்தர் சிவ பூமியென அழைக்கப்படும் மருதானை கப்பித்தாவத்தை ஸ்ரீ பால செல்வ விநாயகர்மூர்த்தி தேவஸ்தானத்தில் பிள்ளையார் கதை மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட ஆலய அறங்காவலர் சபையினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் டிசம்பர் மாதம் 05.12.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை விசேட பூசையுடன் ஆரம்பிக்கப்பட்ட பிள்ளையார் கதை 25.12.2025 வரை இடம்பெறவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 24.12.2025 அன்று காலை 108 சங்காபிஷேகம் நடைபெற்று பின்னர் மாலை 05 மணி அளவில் கஜமுக சஹ்காரம் நடைபெறவுள்ளதுடன், 25.12.2025 காலை 09.30 மணிக்கு சுவாமி உள்ளது மற்றும் உள்வீதி வலம் வந்து விசேட பூஜை ஆராதனைகள் பக்தர்களுக்கு பகல் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் 11.12.2025 அன்று காலை விசேட பூஜைகளுடன் ஆரம்பிக்கப்படவுள்ள ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 20.12.2025 அன்று 10 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் உடல்ரீதியாக,வெளிவீதி உலா வருவதுடன் அன்று பகல் பக்த அடியார்களின் அன்னதானம் வழங்கவும் அருள் கூடியுள்ளதாக ஆலய அறங்காவலர் சபை தெரிவித்துள்ளது.
4 minute ago
14 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
25 minute ago
1 hours ago