2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பேத்தாளை தேர்த்திருவிழா ...

Editorial   / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பேத்தாளை அருள்மிகு ஸ்ரீபாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் சுவாமி தேவஸ்தான வருடாந்த பிரம்மோற்சவம் கடந்த 27.03.2023ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 09ம் நாளாகிய  இன்று (04) செவ்வாய்க் கிழமை தேர்த்திருவிழா இடம் பெற்றது.

தேர்த்திருவிழா ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி கோவில் வீதி, பாடசாலை வீதி வழியாக மட்டக்களப்பு பாசிக்குடா பிரதான வீதியை அடைந்து மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரம்மோற்சவ பிரதிஸ்டா பிரதம குரு யோக மாயாபீடம் வேதாகம கிரியா சிம்மம் சிவஸ்ரீ இராம சோமஸ்கந்த குருக்கள், சர்வசாதகாசிரியர் மதுர சாதகர் பிரம்மஸ்ரீ கே.பவித்திரசர்மா, ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சொ.ரதன் சர்மா குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பூசைகளை நடாத்தி வைத்தனர்.

 எஸ்.எம்.எம்.முர்ஷித்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X