Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
கல்முனை, சேனைக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்குப் பெருவிழா, இன்று வியாழக்கிழமை (10) காலை இடம்பெற்றது.
கடந்த திங்கட்கிழமை (07) ஆரம்பமாகிய கும்பாபிஷேக குடமுழுக்குப் பெருவிழாவில் எண்ணெய்க்காப்பு சாத்தல் நிகழ்வு, செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் புதன்கிழமை மாலை 3.00 மணி வரையும் நடைபெற்று கும்பாபிஷேக பெருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்குப் பெருவிழாவின் கிரியைகளை பிரதிஷ்டா பிரதமகுரு சிவாகம வித்தியா பூசணம், சிவாச்சாரிய திலகம், கிரியா காலமணி, கிரியா சாகரர், ஜோதிட தத்துவநிதி, விபுலமாமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் நடத்தி வைத்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்த பல அந்தணர்களும் இதில் கலந்துகொண்டு விசேட பூஜைகளை நடத்தினர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago