2025 மே 07, புதன்கிழமை

மகரஜோதி பூஜை

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா, அருள்மிகு ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில், எதிர்வரும் 30ஆம் திகதி, ஐயப்ப சுவாமிக்கு மகரஜோதி பூஜை, வெகு சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவ சங்கர குருக்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பூஜையில், 30ஆம் திகதி காலை திருப்பள்ளியெழுச்சியும் கணபதி ஹோமமும் நடைபெற்று, தொடர்ந்து விசேட பூஜைகள் இடம்பெறும்.

பின்னர் சுவாமி உள்வீதி வருதல் இடம்பெற்று பின்னர், மஹேஸ்வர பூஜை இடம்பெறும்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

இந்தப் பூஜையில், மத்திய மாகாண இந்துக் கலாசார அமைச்சர் ஆர்.ராமேஸ்வரன், மத்திய மாகாண உறுப்பினர்களான வி.ராஜாராம் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X