2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கொடியேற்றம்

Editorial   / 2024 பெப்ரவரி 02 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கலாநிதி ஜயகுமார் ஷான் (ஆசிரியர் (SLTS, NDIL, CHR, BED)

மலையக இந்துக்கோவில் வரலாற்று ஆய்வாளர்

 

 

இலங்காபுரியின் மத்திய ஸ்தானத்தில், சைவமும் தமிழும் தழைத்தோங்க நிற்கும் மாத்தளை மாநகர் பன்னாகமம் பகுதியல் உருவத்திருமேனி கொண்டு திவ்ய சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கும் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மாளுக்கு, நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் மாசி மாதம் 12ம் நாள் (2024.02.24) சனிக்கிழமை காலை மக நட்சத்திரத்தில் இரதோற்சவம் இடம்பெறவுள்ளது. அத்துடன், மாசி மாதம் 14ம் நாள் 2024.02.26. திங்கட் கிழமை காலை தீர்தோற்சவமும் இரவு துவஐஅவரோகனமும் (கொடியிறக்கமும்) நடத்தத் திருவருள் கூடியிருக்கிறது.

கிரியாகால நிகழ்வுகள்

2024.02.23 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்ககு, சுடுகங்கை ஸ்ரீ ஏழுமுகக் காளியம்மன் கோவிலிருந்து காவடி ஊர்வல் புறப்படும். மு.ப. 10.00 மணிக்குத் தீ மிதிப்பும் மு.ப 11.00 மணிக்கு ஸ்ரீ சிவனடியார் திருவிழாவும், வசந்த மண்டப பூஜையும் பி.ப 1.00 மணிக்கு மகேஸ்வர பூஜையும் இடம்பெறும். அன்றிரவு திருசூரகத் திருவேட்டைத் திருவிழாவும் இடம்பெறும்.

2024.02.24 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு இரதோற்சவம், வசந்தமண்டப பஜை இடம்பெறும்.2024.02.25 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு கற்பூரத்திருவிழா இடம்பெறும். 2024.02.26 திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு பாற்குடபவணியும் மு.ப 10 மணிக்குத் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.

2024.02.27 செவ்வாய்கிழமை மு.ப 11.00 மணிக்கு ஸ்ரீ சண்N;டஸ்வர உற்சவமும்  மாலை 6.00 மணிக்கு பூங்காவன உற்சவமும் இடம்பெறும்.

தேர் தினத்தன்று ஸ்ரீ பஞ்சமுக விநாயகர், ஸ்ரீ வள்ளி – தெய்வானை சமேத சண்முகர், ஸ்ரீ சிவனம்பாள், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ சண்டேஸ்வரி ஆகிய மூர்த்திகள் சர்வலங்கார அதிவிசித்திர வினோதமான பஞ்சரதங்களிலே ஆரோகணிக்கப்பட்டு. நகர் வீதி உலா நடைபெறும் .

கோவில் அமைவிடம்

இயற்க்கை எழில் தவழ்ந்து விளையாடும் மத்திய மலைநாட்டிலே, கண்டியிலிருந்து சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில் மூவின மக்களும் வாழும் மாத்தளை எனும் மாநகரின் மத்தியிலே, ஆகாயத்தை எட்டிபிடிக்கும் வண்ணம், தென்னிந்திய கலைப்பானியிலே சிற்ப வேலைப்பாடுகளுடன் கம்பீரத் தோற்றத்தோடு, 108 அடியில் நிமிர்ந்த நடையில் இராஜகோபுரத்துடன் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

கோவிலும் வரலாறும்

இலங்கைத் திருநாட்டின் சைவம் தழைத்தோங்கும் வகையில், தன்னிகரல்லாக் கோவிலாகத் திகழும் கோவில்களில் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலும் திகழ்கின்றது என்றால் அது மிகையாகாது. பஞ்ச இரதங்களை கொண்டுள்ள ஒரேயொரு கோவில் இதுவாகும். இதுவே இலங்கையின் மிக உயரமான (108 அடிகள் ) இராஜகோபுரத்தைக் கொண்ட கோவிலுமாகும். இக்கோவிலின் ஆரம்பக் காலத்தின் பூஜைகள் மட்டுமே இடம்பெற்று வந்துள்ளன பின்னர் படிப்படியாக திருவிழாக்களும் சப்பரத் தோர் எடுக்கும் வழக்கமும் வழக்கமும் இருந்தது 1934 ஆம் ஆண்டு சப்பரத்தை மாற்றி விநாயகருக்கும் சிவனம்hபளுக்கும் முருகனுக்கும் இரதோற்சவம் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது. அதேபோன்று 1955 ஆம் ஆண்டளவில் இராஜகோபுரம் உட்பட்ட பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் உதவியுடன் கோவிலின் மஹா மண்டபம் உட்பட முருகன் கோவில், வசந்த மண்டபம், விஷ்னு கோவில், நாயண்மார் கோவில், மினாட்சி, சிவன் கோவில்கள் உருவாக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரி அம்பளுக்குச் சந்தன மரத்தில் சித்திரத் தேர் செய்யப்பட்டு 1977 ஆம் ஆண்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது சில விசமிகளால் சித்திரத் தேர் உட்பட அனைத்துத் தேர்களும் தீயால் எறியூட்டப்பட்டன பிறகு 1992 ஆம் ஆண்டளவில் புதிய சிதிதிரத் தேரையும் ஏனையத் தேர்களையும் செய்யும் பனி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்தென்பது குறிபிடதக்கது.

மேலும் இக்கோவிலில் அமைந்துள்ள 108 அடிகள் உயரமுள்ள இராஜ கோபுரமானது இந்துக்களின் ஒற்றுமையையும் திருப்பணியின் வளர்ச்சியையும் காட்டி நிற்கின்றது  என்றால் அது மிகையாகாது.

மூர்த்தி, தீர்த்தம்,தலவிருட்சம்

கருவறையில் கம்பீரத் தோற்றத்திலே, திவ்ய சிம்மாசனத்தில் அம்பாள் அமர்ந்து நாடிவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறாள் தீர்த்தமாக கோவில் தீர்த்தக்கேணி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் தலவிருட்சம் பல வருடங்களாக கோவிலுக்குள்ளே மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

இக்கோவிலே பல்வேறு திருவிழாக்கள் இனிதே நடைபெற்று இந்து சமயத்தின் பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் தத்துவங்களையும் பேனி பாதுகாத்து வருகின்றமை குறிபிடதக்கது அந்த வகையில் ஆடிப் பெருத்திருவிழா தை மாதப்பிரமோற்சவம், மாசி மகம், நவராத்திரி, பௌர்ணமிச் செவ்வாய், மிக விஷேடமாக சிவராத்திரி, குடமுழுக்குப் பூசைகள், விளக்குப் பூஜை, ஐயப்ப பூஜைகள் என்பன இடம்பெறுகின்றன. அத்தோடு வெள்ளி, செவ்வாய் போன்ற விஷேட தினங்களிலே, அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இடம்பெறுகின்றன. இக்காலங்களிலே பத்தர்களின் கூட்டம் கடலென (தமிழ், சிங்கள) திரண்டு, அம்பாளின் அருளாசிக்கு அலைமோதுவது விஷேட அம்சமாகும்.

கோவிலின் சமூகப் பணி

இக்கோவிலில், இன்னோரன்ன சமூகப் பணிகளை மேற்கொண்டு, பிரதேசவாழ்  மக்களின் அபிவிருதிக்குத் துணை நிற்கின்றமை குறிபிடதக்கது. அந்த வகையில் ஞாயிற்றுகிழமைகள் தோறும் அறநெறி வகுப்புக்கள் இடம்பெறுவது மாணவர்களுக்கு தர்மம் இந்து சமயம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டங்கள், மாணவர்கள் மத்தியில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கான கலைப் போட்டிகளை நடத்துதல், மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற பல பணிகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 இக்கோவிலில் அமைந்துள்ள 108 அடிகள் உயரமான இராஜ கோபுரம், இந்துக்களின் ஒற்றுமையையும் திருப்பணியின்  வளர்ச்சியையும் காட்டி நிற்கின்றது

இலங்கைத் திருநாட்டின்  சைவத்தைத் தழைத்தோங்கச் செய்யும் கோவில்களில் ஒன்றான இக்கோவில் பஞ்ச இரதங்களைக் கொண்டுள்ளமை சிறப்பம்சம் ஆகும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X