2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வீரமாகாளி அம்மன் கோவில் பாற்குடப்பவனி

Suganthini Ratnam   / 2016 ஜூன் 14 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கொக்குவில் ஸ்ரீவீரமாகாளி அம்மன் கோவிலின் வருடாந்தத் திருவிழாவின் இரண்டாம் நாளையிட்டு இன்று செவ்வாய்க்கிழமை பாற்குடப் பவனி நடைபெற்றது.

கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் கோவிலிலிருந்து  ஆரம்பமாகிய பாற்குடப் பவனி, வீரமாகாளி அம்மன் கோவிலைச் சென்றடைந்தது.

இதன்போது பறவைக்காவடி, பாற்காவடி, மயிலாட்டம் உள்ளிட்டவையும் நடைபெற்றன.

இக்கோவிலின் வருடாந்த உற்சவம் நேற்றுத் திங்கட்கிழமை ஆரம்பமாகி .எட்டு தினங்கள்; நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை  தீ மிதிப்புடன் உற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .