2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனை கைலாயப்பிள்ளையார் ஆலய இரதோற்சவம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு,வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான மன்மதவருட ஆவணி சதுர்த்தி பெருவிழாவையொட்டி இன்று புதன்கிழமை இரதோற்சவம் இடம்பெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை(08) கொடியேற்றத்துடன் இவ் ஆலயத்தின் உற்சவம் ஆரம்பமானது.

ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேரானது வாழைச்சேனை பேச்சியம்மன் ஆலய வீதி, சேர்மன் கனகரெத்தினம் வீதி, பிரதான வீதி, விபுலானந்த வீதி, புதுக்குடியிருப்பு பகுதி, கல்குடா வீதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது.

மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ.நா.ஈஸ்வரநிவாசக் குருக்கள் தலைமையில் கிரியைகள் யாவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .