2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வருடாந்த மகோற்சவ திருவிழா

Niroshini   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை அருள்மிகு  ஸ்ரீ தரவை சித்தி விநாயகர்  ஆலய  வருடாந்த மகோற்சவ திருவிழா  நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றது.

கடந்த புதன்கிழமை (10) கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 12 நாட்களாக  இடம் பெற்ற திருவிழா  நேற்று திங்கட்கிழமை (22) தீர்த்தோற்சவதுடன்  நிறைவு பெற்றன .

உற்சவ காலத்தின் போது  பஞ்சமுக அர்ச்சனை தீபத் திருவிழா, பக்தி முக்தி பாவநோற்சவம், வேட்டைத்திருவிழா, புஸ்பாஞ்சலி திருவிழா, கற்பூர சட்டி திருவிழா  என்பன இடம் பெற்று   ஞாயிற்றுக்கிழமை சப்பறத்திருவிழா இடம்பெற்றது.

ஆலயத்தின் பிரதம குரு  சிவஸ்ரீ  கந்தவரதேஸ்வரக் குருக்கள் தலைமையில்  உற்சவ கால கிரியைகள் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .