2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் உற்சவம்…

Editorial   / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பு.தஜிந்தன்

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் உற்சவம், திங்கட்கிழமை (16) சிறப்பாக இடம்பெற்றது.

காலை 7 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்று அதனை தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம் பெற்றது. அதனை தொடர்ந்து 9:30 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னேவர தொடர்ந்து விநாயகரும் அவரை தொடர்ந்து மகாலக்ஷ்மியும் தொடர்ந்து வர வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் பெருந்தேரில் வலம்வந்தார்.

கடந்த 02/09/2024 அன்று கொடியேற்றத்துடன் பெருந்திருவிழா ஆரம்பமாகி,   15 ம் திருவிழாவான தேர்த்திருவிழாவிற்க்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் அடியவர்கள் பல்லாயிரம் பேர்  கலந்துகொண்டிருந்தனர்.

பல அடியார்கள் தூக்கு காவடி, பால்க்காவடி, அங்க பிரதஸ்டை,  பால்குடம் போன்ற பல்வேறு நேற்றிக்கடன்களையும் நிறைவேற்றினர்.

இதேவேளை மக்களுக்கு உரிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் வழங்கியிருந்ததுடன் மக்களிறக்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை பருத்தித்துறை பொலிஸாரும் மேற்கொண்டிருந்தனர்.

செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் 3:00மணியளவில் சமுத்திர தீர்த்த உற்சவமும் இடம் பெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .