Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 மார்ச் 08 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிருஷ்ண பக்திக்கழக இலங்கைக்கிளையின் கீழ் கொட்டாஞ்சேனையில் இயங்கும் ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயம் இவ்வருடம் ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அதற்குத் தேவையான சில அபிவிருத்தி வேலைகளைச் செய்து தருவதாவும், அத்துடன் மேற் படி ஆலயத்தால் வத்தளையில் நடத்தப்பட்டு வரும் கோசாலை பசுக்கள் சரணாலயம் போதிய வசதிகளின்றி நடத்தப்பட்டு வருவதால் அதனை வசதியான இடத்துக்கு மாற்றி சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்து தருவதாகவும் இ.தொ.கா. உபதலைவரும், பிரதமரின் செந்தில் தொண்டமான் இணக்கம் தெரித்துள்ளார்.
கிரு ஷ்ண பக்திக்கழக தலைவர் ஸ்ரீமான் மஹாகர்த்தா தாஸ், அண்மையில் ஆலய பக்தர்கள் இருவர் சகிதம் செந்தில் தொண்டமானை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து அவருக்கு தமது ஆலய வெளியீடான பகவத் கீதை பிரதியொன்றையும் கையளித்து உ ரையாற்றியபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
வத்தளையில் இயங்கும் கோசாலை பசுக்கள் சரணாலயத்துக்கு ஜீவகாருண்ய சிந்தையுள்ள பலர் கொல்லப்படவிருக்கும் பசுக்களை மீட்டெடுத்து பராமரிக்குமாறு ஒப்படைத்து வருகினர்.
இவ்வாறு பெறப்பட்ட பசுக்கள் மட்டும்; சுமார் 40 வரையில் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜீவகாருண்ய சிந்தையுள்ள இன்னும் அநேகர் தொடர்ந்தும் இவ்வாறு கொல்லப்படவிருக்கும் பசுக்களை மீட்டெடுத்து இங்கு கையளிக்க முன்வரும்போதிலும் அவற்றை பராமரிக்க போதிய வசதி இல்லாத நிலைமையை கிருஷ்ண பக்தி கழகத் தலைவர் மஹாகர்த்தா செந்தில் தொண்டமானிடம் எடுத்துரைத்தார்.
3 minute ago
7 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 minute ago
1 hours ago
2 hours ago