2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணா ஆலயத்தில் ஞாயிறன்று ராதாஷ்டமி விழா

Editorial   / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

  

  கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணா ஆலயத்தில் ராதாஷ்டமி  விழா மிக மகிழ்ச்சியாகவும்,   பக்தி பூர்வமாகவும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்.  பக்தர்கள்  நண்பகல் வரை விரதமிருந்து இவ் விழாவைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் விழாவில் பூஜை,  பஜனை,  கீர்த்தனை என்பன இடம்பெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்படும்.

   கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணா ஆலயத்தில் இந்த விழா வருடாந்தம் வெகு விமர்சையாகவும், மகிழ்ச்சியுடனும்,   பக்தி பூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

            ராதாஷ்டமி  பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உச்ச சக்தியான ஸ்ரீமதி ராதாராணி தோன்றிய தினமாகும்.  இந்த புனிதமான நாளில் பக்தர்கள் பக்திச்Nவைகளைச் செய்தும்  தம் தானத்தை  ஸ்ரீமதி ராதா ராணியின் பாதங்களில் சமர்ப்பித்தும்  அவரின் கருணையைப் பெறுகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X