Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 மே 20 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவதாகக் கூறி, முதியவர் ஒருவரை தன் வலைக்குள் வீழ்த்திய கர்ப்பிணி பெண்ணொருவர், அந்த முதியவரிடம் இருந்த பணம் உள்ளிட்ட உடமைகளை அபகரித்துச் சென்றுள்ளார்.
பணம், கையடக்கதொலைபேசி, வங்கி அட்டை, உள்ளிட்டவற்றை அப்பெண் கொள்ளையிட்டு சென்றுள்ளார். அப்பெண்ணுக்கு உதவியதாகக் கூறப்படும், அப்பெண்ணின் முன்னாள் காதலன், கர்ப்பிணிப் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், பேலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. களனிப் பிரதேசத்தில் வைத்தே, அவ்விருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்படும் போது, அவ்விருவரிடமிருந்தும் 10 கிராம் 425 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொருட்களை இழந்த முதியவர், பெலியகொடை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் தேவைகளைப் பூர்த்திச்செய்வதாக கூறிய கர்ப்பிணி பெண், அந்த முதியவரிடம் விருப்பத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். அதன்பிரகாரம், அம்முதியவருடன் செல்வதற்கு இன்றைக்கு இரண்டொரு நாட்களுக்கு முன்னர், அப்பெண் இணங்கியுள்ளார்.
தன்னுடைய கணவனுக்கு களவாக இந்த வேலையைச் செய்வதாக தெரிவித்துள்ள அந்த கர்ப்பிணி பெண், தூர இடங்களுக்குச் செல்லமுடியாது. அருகிலேயே செல்வோமென முதியவரை அழைத்துக்கொண்டு பேலியகொட, மேவெல்ல, ஆற்றுக்கரையோரத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்திருந்த நபரொருவர் தன்னுடைய மனைவியுடன் இருந்ததாகக் கூறி, முதியவரை அச்சுறுத்தி, அவர் மீது தாக்குதல் நடத்தி, மேலே குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் கொள்ளையடித்துக்கொண்டு சென்றுள்ளார். அவ்விளைஞனுடன் அப்பெண்ணும் சென்றுவிட்டார்.
பொலிஸ் விசாரணைகளில் அவ்விளைஞன், அப்பெண்ணின் முன்னாள் காதலன் என கண்டறியப்பட்டுள்ளது. இவிருவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞனிடமிருந்து 5230 மில்லிகிராம் ஹெரோய்னும், கர்ப்பிணி பெண்ணிடமிருந்து 5195 மில்லிகிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் முதியவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கையடக்க தொலைபேசி மற்றும் வங்கி அட்டை ஆகியன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல்வேறான கொள்ளைகளுடன் தொடர்புடைய இவ்விருவருக்கு எதிராக, புதுக்கடை, மஹர ஆகிய நீதிமன்றங்களில் திறந்த பிடிவிறாந்துகள் பிறக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணிப் பெண்ணுக்கு எதிராக ஐந்து பிடிவிறாந்துகளும், இளைஞனுக்கு எதிராக ஏழு பிடிவிறாந்துகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
14 minute ago
23 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
37 minute ago
45 minute ago