2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

தட்டிவிடப்பட்ட பதவிகள்

Menaka Mookandi   / 2018 மே 16 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, கையைச் சேர்ந்த எம்.பிகளுக்கு, இராஜாங்கமோ அல்லது பிரதியமைச்சோ எனும் எந்தவொரு பதவியுயர்வும் கிடைக்கவில்லை.

சி​ரேஷ்டத்துவம் கொண்ட சிலருக்கேனும், அமைச்சுப் பதவிகள் கிட்டுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவ்வாறு கிடைக்கவில்லை.

வெற்றிடங்கள் இருக்கும் நிலையி​லும், கைச் சின்னத்தைச் சேர்ந்த எவருக்கும் பதவியுயர்வு கிடைக்காமை தொடர்பில், சிலர் தேடிப்பார்க்கத் தொடங்கினார்களாம். நாட்டின் மஹா மந்திருக்கும் டெலஸ்கோப் பொறுத்தித் தேடிப்பார்க்கத் தொடங்கினார்களாம். அப்போது தான், உண்மைக் கதை, கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்ததாம்.

கையைச் சேர்ந்த சிலருக்கு, அமைச்சுப் பொறுப்பு கொடுத்தால் நல்லதென, யானைச் சின்னத்தின் தலைமைகளிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதாம். அத்துடன், சிலரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாம். இதனால், யானையிலும் கையிலும் தலையைப் புகுத்திக்கொண்டிருப்போருக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டுமென எண்ணிய கையின் தலைவர் எடுத்த முடிவால் தான், கையைச் சேர்ந்த சிலருக்குப் பதவியுயர்வு கிட்டவில்லையாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .