2022 ஜூலை 07, வியாழக்கிழமை

அடுத்த திருமணத்துக்கு தயாரான நடிகை

Editorial   / 2020 ஜூன் 18 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

90களில் அறிமுகமானாராம் அந்த மூன்றெழுத்து நடிகை. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர், பெரிய வரவேற்பு கிடைக்காததால், சினிமாவை விட்டு விலகினாராம். 

சினிமாவில் இருந்து விலகிய பின்னர் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டாராம். 

பின்னர் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து, அவரையும் விவாகரத்து செய்துவிட்டாராம். 

அதன்பின்னரும் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் லிவிங் டுகெதரில் வாழ்வதாக கிசுகிசுக்கப்படும் அந்த நடிகை, அவரையும் விட்டு பிரிந்துவிட்டாராம். 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெரிய முதலாளி  நிகழ்ச்சியில் தனது அதட்டலான தொனியால் தற்போது பிரபலமாகிவிட்டாராம். 
அதன்பின்னர் நாயகிக்கு வாய்ப்புகள் குவிகிறதாம். இந்த நிலையில், நடிகை தற்போது அடுத்த திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .