2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

‘செயலி’யில் விபசாரம்; பெண்கள் அறுவர் கைது

Editorial   / 2021 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, மசாஜ் நிலையங்கள் எனும் போர்வைக்குள் மறைத்து, விபசாரம் செய்த, இரண்ட மத்திய நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

ராஜகிரிய குரே மாவத்தை மற்றும் எத்துல்கோட்டை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்விரு நிலையங்களும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

அவ்விரு மத்திய நிலையங்களிலும் விபசாரத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 20க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுகளுடைய பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்விரு நிலையங்களையும் முகாமைத்துவம் செய்தவர்கள் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள், சிலாபம், கெக்கிராவ, அங்குணகொலபெலஸ்ஸ, நெலுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கொழும்பு பிரதேசத்தில், ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வதாகவே தங்களுடைய வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு, அப்பெண்கள் வீட்டிலிருந்து வந்துள்ளனர் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

இணையத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் “அப்” (செயலி) ஊடாகவே, இப்பெண்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளனர். அந்த மத்திய நிலையங்களுக்குள் 2,500 ரூபாய்க்கே பெண்ணொருவர் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதெனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .