2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

ஆச்சியின் காதால் சிக்கிய ‘சிம்’ காரர்

Editorial   / 2023 மார்ச் 03 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கையடக்க தொலைபேசிகளின் சிம் கார்ட் விற்பனை செய்யும் நபரொருவர், ஆனமடுவ கோண்வலகந்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கு தனியாக இருந்த 78 வயதான ஆச்சியின் காதுகளில் இருந்த தோடுகளை களவாடிச் செல்வதற்கு முயன்றுள்ளார்.

எனினும், ஏதோவொரு விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த அந்த ஆச்சி, அபாயக்குரல் எழுப்பியுள்ளார். அபாயக்குரலைக் கேட்ட கிராமவாசிகள் அந்த நபரை கையும் மெய்யுமாக பிடித்து ஹபராதுவ பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதானவர் என பொலிஸாரின் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நபர், இன்றைக்கு பல மாதங்களுக்கு முன்னர் சிம் கார்ட்டுகளை விற்பனை செய்வதற்காக அந்தப் பிரதேசத்துக்கு வந்திருந்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .